எமது விலைகள் யாவும், சுங்க கட்டணம், உள்ளூர் வரி போன்றவற்றை தவிர்த்து, துணி, தையல் கூலி, அனுப்புகின்ற செலவுகள் உள்பட்டது. சுங்க கட்டணம், உள்ளூர் வரி போன்றவை சம்பந்தபட்ட இலாகாவினால் அறவிடப்படின், அவற்றை நீங்கள் தனியாகசெலுத்த வேண்டும்.
2. விநியோகம்
ஒவ்வொரு கட்டளையையும் இரு தினங்களுக்குள் பரிசீலித்து, மூன்று வாரங்களுக்குள் தைத்து "courier" மூலம் அனுப்பி வைக்கிறோம்.
3. கட்டளைகளில் மாற்றம் / இரத்து செய்ய
ஏற்றுக் கொள்ளப்பட்ட கட்டளை எந்த நிலையிலுள்ளது என்பதனை தெரிந்து கொள்வதற்கும், "பரிசீலனை நிலை" யிலிருக்கும் போது கட்டளைகளில் மாற்றம் / இரத்து செய்யவதற்கும், "கட்டளையின் நிலை" என்ற வலயபக்கத்திற்கு செல்லவும். கட்டளைகளை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையிலும், அதன் பின்பும் மாற்றங்கள் / இரத்து செய்யமுடியாது என்பதனை இங்கு தெரிவித்து கொள்கிறோம்.
4. கட்டளையின் நிலையினை தெரிந்து கொள்ள
நீங்கள் இட்ட கட்டளையின் நிலையினை மற்றும் courier number யினை தெரிந்து கொள்ள, "கட்டளையின் நிலை" என்ற தொடர்புக்கு செல்லவும்.
5. பணம் செலுத்தும் முறை
எமக்கு செலுத்த வேண்டிய தொகையினை இந்தியாவில் உள்ளவர்கள் இந்திய நானையத்திலும் பிற நாடுகளில் உள்ளவர்கள், "PayPal" மூலமும் செலுத்தவும்.
6. தகவல் பாதுகாப்பு
நீங்கள் கொடுக்கும் தகவல்களை எவ்வாறு பாதுகாக்கிறோம், பயன்படுத்துகிறோம் என்பதனை அறிய விரும்பின் "தகவல் பாதுகாப்பு" என்ற எமது வலய பக்கத்திற்கு செல்லவும்.
7. எம்மை தொடர்பு கொள்ள
எமது வலய பக்கங்களில் எங்குமே இல்லாத ஒரு தகவலோ அல்லது சந்தேகமோயிருப்பின் "info@thaiyalkaari.com" அல்லது "தகவல்@தையல்காரி.com" எனும் முகவரிக்கு மின் அஞ்சல் அனுப்பவும்.